Thursday, 28 September 2017

வீட்டுக் கடன் பெற ஆலோசனை(Housing Loan Advice)

இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலையில், வீடு வாங்கக் கடன்  Housing Loan கிடைக்கவில்லை என்றால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு, சொந்த வீடு என்பது வெறும் கனவாகவே Dream போய்விடும். அதேபோல, வீட்டுக் கடன் கிடைக்காது என்றால், ரியல் எஸ்டேட் Real Estate துறையே படுத்துவிடும். வீட்டுக் கடனைப் பொறுத்தவரையில் சாதகங்கள் நிறைய உண்டு.


குறைந்த வட்டி Low Interest: முதலாவது, பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களைவிட, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கணிசமாகக் குறைவு. வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் இப்போது 9 முதல் 10 சதவிகிதத்துக்குள் தான் இருக்கிறது.

உயரும் மதிப்பு: கடந்த சில ஆண்டுகளாக நிலவும் சூழ்நிலைகளால் வீடு, வீட்டு மனைகளின் மதிப்பு தற்போது குறைந்திருக்கிறது. ஆனால், 5 அல்லது 10 வருடங்கள் என்று நீண்டகால அடிப்படையில் பார்த்தால், அதன் மதிப்பு நிச்சயம் அதிகரித்திருக்கும். நீண்ட கால அடிப்படையில் சொத்து மதிப்பு அதிகரிக்கும் என்றாலும், அடிமனையின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மதிப்பு உயர்ந்தே இருக்கும்.

நீண்டகாலக் கடன் Long Term Loan: அடுத்து, வீட்டுக் கடன் நீண்டகாலத்துக்கானது, பிற கடன்கள் பெரும்பாலும் 5 முதல் 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையில், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த 30 ஆண்டுகள் வரையில்கூட அவகாசம் கிடைக்கிறது.

வரிச்சலுகை என்ற இரட்டை ஆதாயம் Tax Benifit: இதையெல்லாம்விட இன்னொரு பெரிய நன்மை, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும்போது அசல், வட்டி இரண்டுக்கும் ( சில நிபந்தைகளுக்கு உட்பட்டு) வருமான வரிச்சலுகை கிடைக்கிறது.

எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்: புதிய அல்லது பழைய வீடு வாங்குவதற்கு House Purchase மட்டுமின்றி, வீட்டுமனை வாங்கவும் Land Purchase பழைய வீட்டைப் புதுப்பிக்கவும் கூட கடன் கிடைக்கிறது House Renovation. ஆனால், புதிய அல்லது பழைய வீடு வாங்குவதற்கான கடனுக்கு மட்டுமே திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 30 ஆண்டுகள்வரை கிடைப்பதுடன் வருமான வரிச்சலுகையும் கிடைக்கும். வீட்டுமனை மட்டுமே வாங்கக் கிடைக்கும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரு்பபிச் செலுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடைக்காது. அதே நேரம், காலி மனையாக வாங்கி, அதில் புதிதாக வீடு கட்டுவதற்காகக் கடன் வாங்கினால் அதற்கு வரிச்சலுகைகள் உண்டு என்பதுடன், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கும் 30 ஆண்டுகள்வரை அவகாசம் கிடைக்கும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்: புதிய வீடு என்றால் அதிகபட்சமாக அதன் மதிப்பில் 75 முதல் 85 சதவிகிதம்வரை கடன் கிடைக்கும். பழைய வீடு என்றால், 60 முதல் 75 சதவிகிதம் வரையில் கிடைக்கும், கடன் பெறுபவர் அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும் சக்தி தனக்கு இருக்கிறது என்று நிரூபித்தால், சில வங்கிகள் பத்திரப் பதிவுக்கான தொகைக்கும் Document Registration Charge சேர்த்தே கடன் கொடுக்கின்றன.

வீட்டின் மதிப்பை வைத்து மட்டுமே கடன் தொகையை வங்கிகள் முடிவு செய்வதில்லை. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறன் Repayment Capacity, ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால் அதை முறையாகச் செலுத்தி இருக்கிறாரா என்பதை எல்லாம் பார்த்துதான் கடன் தொகை முடிவு செய்யப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் ஒருவர் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்க விரும்பலாம். ஆனால், இந்த மதிப்பில் 75 சதவிகிதமான 37.5 லட்சம் ரூபாயைக் கடனாகத் தர வங்கிகள் விரும்பாது. காரணம் இவ்வளவு பெரிய கடனுக்கான மாதாந்திர தவணையைச்  EMI செலுத்த அவரது முழுச் சம்பளமும் கூடப் போதாது. எனவே கடன் பெறுபவர் அதைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்பதையும் வங்கிகள் Banks கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. பிடித்தங்கள் எல்லாம் போத ஒருவர் எவ்வளவு மாதச் சம்பளம் பெறுகிறாரோ அதில் அதிகபட்சமாக 60 சதவிகிதம் வரை கடனுக்கான மாதத் தவணையாக அவரால் செலுத்த முடியும் என்ற அடிப்படையில்லேயே கடன் தொகையையும் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் வங்கிகள் முடிவு செய்கின்றன.

ஒருவரத நிகர மாதச் சம்பளத்தைப் போல 60 மடங்குவரை வங்கிகள் கடன் கொடுக்கின்றன. கடன் கொடுக்கும்போது, கடன்தாரரின் Borrower  வயதையும் வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. பணி ஓய்வு Retirement பெற பல ஆண்டுகள் இருக்கும் ஒருவரையும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறுபவரையும் வங்கிகள் சமமாகக் கருதுவதில்லை. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், நிகர மாதச் சம்பளத்தைப்போல 48 மடங்குவரை மட்டுமே கடன் கிடைக்கும்.

அதிக கடன் பெற என்ன வழி: ஒருவரது மாதச் சம்பள அடிப்படையில் குறைவான தொகையே கடனாகக் கிடைக்கும் என்ற நிலையில், வருமானம் ஈட்டம் அவரது வாழ்க்கைத் துணையையோ அல்லது மகனையோ, மகளையோ இணை மனுதாரராகச் Co Applicant சேர்த்துக் கொண்டால், அவர்களது வருமானமும், சேர்த்துக் கணக்கிடப்பட்டு, அதிக தொகை கடனாகக் கிடைக்கும். சில பெண்கள் டியூஷன், தையல் என்ற சுயமாகத் தொழில் செய்து வருமானம் காட்டுவார்கள். ஆனால், அதை வருமானமாகக் காட்டினால், வங்கிகள் ஏற்காது. அதேசமயம் அந்த வருமானத்தைக் கணக்கில் காட்டி, தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தால், சிறிய தொகையானாலும் அந்த வருமானத்தையும் சேர்த்த கடன் தொகை முடிவு செய்யப்படும்.

டாக்டர் Doctor, வக்கீல் என்று சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள். தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருந்தால், அதன் அடிப்டையில் அவர்களுக்கும் கடன் கிடைக்கும். எனவே, சுயதொழில் செய்பவர்கள், வருமானவரி செலுத்த வேண்டிய அளவுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் வருமான வரி Income Tax கணக்கைத் தொடர்ச்சியாக தாக்கல் செய்து வருவது பிற்காலத்தில் உதவும்.

வட்டி விகிதம் எவ்வளவு Interest Rate: பொதுவாக இப்போது அரசு வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி 9 முதல் 10 சதவிகிதத்திற்குள் .ள்ளத. தனியார் வங்கிகள் Private Banks மற்றும் வீட்டுக் கடன் கொடுப்பதற்கென்றே உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் 11 சதவிகிதம் வரை உள்ளது.

வட்டி விகிதங்களில் இரண்டு முறைகள் உள்ளன. ஃபிக்ஸட் ரேட் Fixed Rate எனப்படும் நிலையான வட்டி விகிதம் என்பது ஒன்று. இதில், வட்டி விகிதம் நிலையாக இருக்கும். ரிசர்வ் வங்கி அவ்வப்போது, வட்டி விகிதங்களை மாற்றி அமைத்தாலும் இந்த வட்டி அதிக மாற்றத்துக்கு உள்ளாகாமல் நிலையாக இருக்கும்.

ஃப்ளோட்டிங் ரேட் Floating Rate எனப்படும் மாறுபடம் வட்டி விகிதம் இரண்டாவது வகை. இதில், ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவிக்கும் வட்டி விகிதங்களுக்கு ஏற்பட வீட்டுக் கடன் வட்டி விகிதமும் மாறுபடும். வரும் காலத்தில் வட்டி விகிதங்ள் உயரும் வாய்ப்பு இருந்தால், நிலையான வட்டி விகிதத்தின் கீழ் கடன வாங்கலாம். வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், மாறுபட்ட வட்டி விகிதத்தின் கீழ் கடன் வாங்குவது பலன் தரும்.

சில நேரங்களில், நமக்குக் கடன் கொடுத்த வங்கியின் வட்டி விகிதங்களைவிட, மற்றொரு வங்கியின் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். அப்போது, ஏறகெனவே கடன் பெற்ற வங்கியில் இருந்து வட்டி விகிதம் குறைவாக இருக்கும் வங்கி மாற்றிக் கொள்ளவும் Balance Transfer முடியும். ஆனால், .அதைச் செய்யும்முன், முதலில் கடன் பெற்ற வங்கியில் முன்கூட்டியே கடனை அடைத்தால் அதற்கு அபராதம் எதுவும் உண்டா, புதிதாகக் கடன் பெறும் வங்கியில் கடன் பரிசீலனைக் கட்டணம் எவ்வளவு என்பதை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள்.

தமிழகம் முழுவதும் வீட்டுக்கடன் பெற்றுத்தர தொடர்பு கொள்ளவும். 
ஜெயசெல்வன், 
ஸ்கை மேனேஜ்மென்ட்  சர்வீஸ்,
 ஈரோடு -638001
Cell: 9578761657

2 comments:

  1. If you had financial problems, then it is time for you to smile. You only need to contact Mr. Benjamin  with the amount you wish to borrow and the payment period that suits you and you will have your loan in less than 48 hours. I just benefited for the sixth time a loan of 700 thousand dollars for a period of 180 months with the possibility of paying before the expiration date. Make contact with him and you will see that he is a very honest man with a good heart.His email is lfdsloans@lemeridianfds.com and his WhatApp phone number is + 1-989-394-3740 

    ReplyDelete
  2. I now own a business of my own with the help of Elegantloanfirm with a loan of $900,000.00 USD. at 2% rate charges, at first i taught with was all a joke until my loan request was  process under five working days and my requested funds was transfer to me. am now a proud owner of a large business with 15 staffs working under me. All thanks to the loan officer Russ Harry he is a God sent, you can contact them to improve your business on.. email-- Elegantloanfirm@hotmail.com. / Whatsapp number +393511617486

    ReplyDelete